பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் வேதனையில் இளைஞர் தற்கொலை!

 
poison

தேனி மாவட்டம் கூடலூரில் பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி போதுமணி. இவர்களது 2-வது மகன் மதன மணி (24). இவர் கூடலூரில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், மதன மணி, தனக்கு இருசக்கர வாகனம் வாங்கித் தரும்படி பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், பெற்றோர்கள் வாகனம் வாங்கி தரவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

theni

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற நிலையில், மதனமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மதன மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் வாங்கி தராததால் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.