நீலகிரி முதுமலையில் புலி தாக்கி பழங்குடியின பெண் உயிரிழப்பு!

 
dead body

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின குடியிருப்பை சேர்ந்தவர் மூதாட்டி மாரி (63). இவர் நேற்று மாலை வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இரவாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை கிராமத்தினர் மீண்டும் தேடியபோது, வளர்ப்பு யானை முகாம் அருகே குடியிருப்பு பகுதியை ஓட்டியுள்ள புதரில் மாரியின் உடல் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாரியின் உடலில் புலி தாக்கியதற்காக காயங்கள் இருந்தது.

tiger

இதனால் மாரியை புலி அடித்துக்கொன்று புதரில் அவரது உடலை புதரில் இழுத்துச்சென்று போட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, வனத்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக  கடந்த மாதம் தெப்பக்காடு பகுதியில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் மாதன் என்பவர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.