ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் கீழ்கண்ட விவரப்படி காலியாகவுள்ளது. எட்டையார்பாக்கம் அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.

காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் ரூ.7500/- வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித்தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு  (Central Teacher Eligibility Test – CTET) அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி விவரம் - தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.(இல்லையெனில்)  வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (TET)இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2023 மாதம் வரையில் தற்காலிகமாக நிரப்பப்படும். பணிநாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்  ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாளை மாலை 5.45க்குள் ஒப்படைத்திட வேண்டும் என, ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.