நீலகிரியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

 
jobs

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கூடலூர் வட்டாரத்தித்திற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கீழ்காணும் தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 1 பி பிளாக், கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை, நீலகிரி மாவட்டம் 643 005 என்ற முகவரிக்கு 7.02.2023 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

nilgiris

பணியின் பெயர் - வட்டார ஒருங்கிணைப்பாளர்  மதிப்பூதியம் - ரூ.12,000/- தகுதிகள்  - ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதம் MSOffice சான்றிதழ் பயிற்சி படித்திருக்க வேண்டும் (அல்லது) கணினி அறிவியல் அல்லது கணினி சார்ந்த பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இத்திட்டம் குறித்து குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெண் பாலினத்தவராக இருக்க வேண்டும்.