காஞ்சிபுரத்தில் தற்காலிக பல் மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள தற்காலிக பல் மருத்துவர் உள்ளிட்ட 14  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பல் மருத்துவர் (Dental Surgeon)-01, பதிவு உதவி பணியாளர் (trauma Registry Assistant(Staff Nurse))-02, பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)-03,இயன்முறை மருத்துவர் (Physiotherapists)-01, துணை செவிலியர் (ANM)-02, தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)-01 மற்றும் மருத்துவமனை பணியாளர் (MPHW)-04 ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய அறிவிப்பு.

பணியின் பெயர் - பல் மருத்துவர் (Dental Surgeon), கல்வித்தகுதி - பிடிஎஸ், பணியிடம் -பரந்தூர் சமூக சுகாதார மையம், காலியிடங்கள் - 1, மாத ஊதியம் - ரூ.34,000/- ; பணியின் பெயர் - உதவி பணியாளர்(trauma Registry Assistant(Staff Nurse)), கல்வித்தகுதி - பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் மற்றும் கணினி அறிவு, பணியிடம் -காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, காலியிடங்கள் - 2, மாத ஊதியம் - ரூ.14,000/-

doctors

பணியின் பெயர் - பல்மருத்துவ உதவியாளர் (Dental Assistant), கல்வித்தகுதி -  10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  முன் அனுபவம், பணியிடம் -  சமூக சுகாதார மையம் மதுரமங்கலம், பரந்தூர் மற்றும் மானாம்பதி, காலியிடங்கள் - 3, மாத ஊதியம் - ரூ.13,800/- ; பணியின் பெயர் - துணை செவிலியர்(ANM), கல்வித்தகுதி - must have passed SSLC(before 15/11/12)+2(after 15/11/12)2.must have completed 18 moths(before 15/11/12) and 24 months(after 15/11/12) training course in Multipurpose Health Worker(female) awarded by the DPH & PM Chennai in Recognized institutions and should be Registered in Tamil Nadu Nursing Council, நகர ஆரம்ப சுகாதார நிலையம் மாங்காடு , காலியிடங்கள் - 2, மாத ஊதியம் - ரூ.14,000/-

பணியின் பெயர் - இயன்முறை மருத்துவர் (Physiotherapists), கல்வித்தகுதி -  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி பட்டம் (BPT), பணியிடம் -  சமூக சுகாதார மையம் பரந்தூர், காலியிடங்கள் - 1, மாத ஊதியம் - ரூ.13,000/- ; பணியின் பெயர் - தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator), கல்வித்தகுதி -  ஏதாவதொரு பட்டப்படிப்பு, தமிழ் - ஆங்கிலம் டைப்பிங் லோயர் மற்றும் கணினி அறிவு, பணியிடம் -  துணை இயக்குநர் சுகாதார பணிகள் காஞ்சிபுரம், காலியிடங்கள் - 1, மாத ஊதியம் - ரூ.13,500/- ; பணியின் பெயர் - மருத்துவமனை பணியாளர் (MPHW), கல்வித்தகுதி - எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், பணியிடம் -  சமூக சுகாதார மையம் பரந்தூர் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மாங்காடு, காலியிடங்கள் - 4, மாத ஊதியம் - ரூ.8,500/-

nurse
நிபந்தனைகள் : இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர். மாவடட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், (District Health Society), காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501. தொலைபேசி எண் 044/27222019.

குறிப்பு : விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self Attested) சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. 15.02.2023 அன்று மாலை 5.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.