திண்டுக்கலில் தற்காலிக சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
dindigul

திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தற்காலிக சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, மிஷன் வாட்சல்யா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர் ஒரு பணியிடத்திற்கு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக பணியாளருக்கு தொகுப்பூதியமாக ரூ.18,536/- ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். சமூக பணியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(10+2+3). சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், சமூக பணி மற்றும் கணினி இயக்குதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

jobs

மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்று அல்லது மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண் 4. 2-வது குறுக்குத்தெரு(மாடி) எஸ்பிஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்). திண்டுக்கல் - 624 004 என்ற முகவரிக்கு 28.02.2023-க்குள் சேரும் வகையில் அனுப்பிட வேண்டும். மேலும், விபரங்களுக்கு தொலைபேசி எண் 0451 - 2904070-ல் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.