கிருஷ்ணகிரி அருகே எலி பேஸ்ட் சாப்பிட்ட குழந்தை பலி

 
dead dead

கிருஷ்ணகிரி அருகே தவறுதலாக எலி பேஸ்ட்டை சாப்பிட்ட இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கென்டிகானூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(42). விவசாயி. இவருக்கு இரண்டரை வயதில் ரேஷ்மா என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரேஷ்மா, எதிர்பாராத விதமாக எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதில் சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

krishnagiri

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை ரேஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.