திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்பு!

 
tirupathur collector

திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த அமர் குஷ்வாஹா சமீபத்தில் சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக, ராணிப்பேட்டை  மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டத்தின் 3-வது ஆட்சித்தலைவராக முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

tirupattur

பதவியேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கடை கோடி வரை இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்ப்பேன் என்றும், பல்வேறு திட்டப்பணிகளை விரிவுபடுத்தி செய்து முடிப்பேன் என்றும் கூறினார்.  24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்களுக்காக திறந்தே இருக்கும் என கூறிய அவர், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, பொதுமக்களின் நலன் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு. குழந்தைகளுக்கு வளர்ச்சி ஆகியவற்றை சிறப்பாக செய்து தருவேன் என கூறினார்.