கோவை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி… போலீசிடம் தப்பிக்க மிளகாய் பொடியை தூவிச்சென்ற கொள்ளையர்கள் !

 

கோவை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி… போலீசிடம் தப்பிக்க மிளகாய் பொடியை தூவிச்சென்ற கொள்ளையர்கள் !

கோவை

கோவை வெள்ளலூரில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம்மை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியில் கனரா வங்கி கிளையும், அதன் அருகிலேயே ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மர்மநபர்கள் சிலர் இன்று அதிகாலை ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்த்தபோது, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

கோவை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி… போலீசிடம் தப்பிக்க மிளகாய் பொடியை தூவிச்சென்ற கொள்ளையர்கள் !

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், கோவை தெற்கு உதவி ஆணையர் வின்சென்ட் தலைமையில் போத்தனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தங்களின் முகம் பதிவாகாமல் இருப்பதற்காக கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்தும், மிளகாய் பொடியை தூவி விட்டும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து, இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மையம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வெள்ளலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.