நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை… கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு!

 

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை… கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு!

கோவை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை… கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு!

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தின் சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இதேபோல், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வருவதால் கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை மற்றும் வால்பாறை சோலையாறு அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.