மாட்டுவண்டியில் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நாகை ஆட்சியர்!

 
nagai

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாட்டு வண்டியில் வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் கிராமத்தில் நேற்று மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது.  இந்த விழாவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ முகமது ஷாநவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

nagai

முன்னதாக, விழாவுக்கு வந்த ஆட்சியர் மற்றும் எம்எல்ஏவை - கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று மேளதாளத்துடன் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய ஆட்சியர் அருண் தம்புராஜ், பின்னர் கால்நடைகளுக்கு சூடம் ஏற்றி வணங்கினர். தொடர்ந்து, கால்நடைத்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினர்.

தொடர்ந்து, தப்படித்து நடனமாடி கிராம மக்களோடு பொங்கல்  விழாவை கொண்டாடி மகிழ்ந்தார். மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது மாடுகளை அலங்கரித்து, மாடுகளின் மீது மஞ்சள் தண்ணீரை தெளித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.