பொள்ளாச்சி பகுதியில் பறிமுதல் செய்த ரூ.14 லட்சம் மதுபாட்டில்கள் அழிப்பு

 
liquor sized

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை, போலீசார் மண்ணில் கொட்டி அழித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார், கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரும் மது விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட  மற்றும் வாகனங்களில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். 

ss

இந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பறிமுதலான மதுபாட்டில்களை அழிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து, நேற்று மதுவிலக்குப்பிரிவு போலீசார், ரூ.14 லட்சம் மதிப்பிலான10 ஆயிரத்து 446 மதுபாட்டில்களை பொள்ளாச்சி - கோவை சாலை உள்ள காலி இடத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் முன்னிலையில் மதுவை நிலத்தில் கொட்டி அழித்தனர்.