தருமபுரி மாவட்டத்தில் 1,478 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் திவ்யதர்ஷினி!

 

தருமபுரி மாவட்டத்தில் 1,478 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் திவ்யதர்ஷினி!

தருமபுரி

தருமபுரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நேற்று வெளியிட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து 1,478 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் திவ்யதர்ஷினி வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டு பேசியபோது, பாலக்கோடு தொகுதியில் 267, பென்னாகரம் தொகுதியில் 292, தருமபுரி தொகுதியில் 306, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 314 மற்றும் அரூர் தனி தொகுதியில் 299 என மாவட்டம் முழுவதும் 1,478 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் 1,478 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர் திவ்யதர்ஷினி!

இவற்றில் வாக்குச்சாவடி நிலையங்களின் பெயர் மாற்றம், இடம் மாற்றம், 1500 வாக்காளர்களுக்கு மிகையாக இருப்பின் பிரித்தல் மற்றும் வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடி நிலையங்களை பிரித்து புதியதாக வாக்குச்சாவடி நிலையங்களை உருவாக்குவதல் போன்ற விவரங்கள் இருப்பின் உடனடியாக அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுகொண்டார்.

இதுதொடர்பான, அரசியல் கட்சியினரின் முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.