அனுமதியில்லா டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள்… செப்.8-க்குள் அகற்ற தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

அனுமதியில்லா டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள்… செப்.8-க்குள் அகற்ற தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகளை வரும் 8ஆம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண / துக்க நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி விளம்பரங்கள், வியாபார ரீதியில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அனுமதியில்லா டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள்… செப்.8-க்குள் அகற்ற தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் ஆகியவற்றை வரும் 8ஆம் தேதிக்குள் தாமாக அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்டவர்களுகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அகற்றிகொள்ளாதவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.