தருமபுரியில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கான தேர்தல் முன்னேற்பாட்டு ஆய்வுக்கூட்டம்!

 

தருமபுரியில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கான தேர்தல் முன்னேற்பாட்டு ஆய்வுக்கூட்டம்!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆலோசனை மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பின் காரணமாக 10 பதவிகளும், ராஜினாமாக காரணமாக 3 பதவிகளும், இதர காரணத்தால் ஒரு பதவியும் என 14 பதவியிடங்கள் காலியாக உள்ளன. மேற்கண்டவாறு காலியாக உள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடத்தியது.

தருமபுரியில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கான தேர்தல் முன்னேற்பாட்டு ஆய்வுக்கூட்டம்!

இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் மேற்கண்ட காலி பதவிகளுக்கு தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம், ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி மேற்கண்ட காலி பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் 6 ஒன்றியங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்கண்டவாறு தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கும் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 31 ஆயிரத்து 37 ஆண் வாக்காளர்களும், 31 ஆயிரத்து 60 பெண் வாக்காளர்களும் என 62 ஆயிரத்து 97 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) இராமச்சந்திரன், தருமபுரி மாவட்ட கூடுதல் எஸ்.பி புஷ்பராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்கள்) ரவிச்சந்திரன் உள்பட 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.