தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்த ஆட்சியர்!

 

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்த ஆட்சியர்!

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசு உத்தரவுப்படி தருமபுரி மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் 225 அரசு பள்ளிகள், 6 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 122 தனியார் பள்ளிகள் என மொத்தம் 353 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு, வகுப்புகளுக்கான மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்தனர். முகக்கவசம் அணிந்து வருகை தந்த மாணவர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்த ஆட்சியர்!

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இடவசதியை பொறுத்து ஒரு சில பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுழற்ச்சி முறையில் வகுப்புகள் நடத்திட திட்டமிட்டுள்ளனர். மேலும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்றும் இதர பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். மேலும், பள்ளிகளில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர் திவ்யதர்ஷினி, பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்த ஆட்சியர்!

அப்போது, அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்கவும், இதனை கண்காணிக்க அமைத்துள்ள துறை சார்ந்த அலுவலர்கள் குழு உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.