தருமபுரி மாவட்டத்தில் நாளை 850 இடங்களில் தடுப்பூசி முகாம்… பொதுமக்களுக்கு, ஆட்சியர் திவ்யதர்ஷினி அழைப்பு!

 

தருமபுரி மாவட்டத்தில் நாளை 850 இடங்களில் தடுப்பூசி முகாம்… பொதுமக்களுக்கு, ஆட்சியர் திவ்யதர்ஷினி அழைப்பு!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் நாளை 850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக, மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்தது, தொற்று பாதிப்போர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக கூறியுள்ளார். கடந்த 8ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும், தருமபுரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொண்ட அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டு என்றும் அவர் தெரிவித்துளளார்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை 850 இடங்களில் தடுப்பூசி முகாம்… பொதுமக்களுக்கு, ஆட்சியர் திவ்யதர்ஷினி அழைப்பு!

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நாளை தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெற உள்ளதாகவும், இவற்றில் விடுபட்ட பயனாளிகள், முன்கள பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்ற அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள் சங்கங்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், கோவில் மற்றும் சுற்றுலா தல ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்துகொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.