திண்டுக்கல் மக்கள் குறைதீர் கூட்டம்: 27 பயனாளிகளுக்கு ரூ.10.51 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

 
dgl

திண்டுக்கல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூ.10.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விசாகன் வழங்கினார்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் கோரி 223 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாகன், அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடன் நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள அனைத்து மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

dgl

தொடர்ந்து, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்என ரூ.6.85 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள், குஜிலியம்பாறை வட்டத்தை சேர்ந்த 3 பயனாளிகள், திண்டுக்கல் மேற்கு வட்டத்தை சேர்ந்த 10 பயனாளிகள், நத்தம் வட்டத்தை சேர்ந்த 14 பயனாளிகள் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.10.51 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை, ஆட்சியர் விசாகன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) பிரியங்கா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சரவணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.