உள்ளாட்சி தேர்தல்... விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வென்ற திமுக கூட்டணி!

 
vnr

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில், அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 25 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நேற்று 9 மையங்களில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினராக, திமுக வேட்பாளர் பகவதி வெற்றி பெற்றார். 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 2 இடங்களில் திமுக வேட்பாளர்களும், ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் வெற்றி பெற்றனர். 

virudhunagar ttn

அதேபோல், 4 ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில், அழகியநல்லூர் ஊராட்சி தலைவராக ரவிச்சந்திரன், உளுத்திமடை ஊராட்சி தலைவராக ரேவதி, என்.முக்குளம் ஊராட்சி தலைவராக இப்ராகிம், பாவாலி ஊராட்சி தலைவராக அழகம்மாளும் வெற்றி பெற்றனர். மேலும், 17 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், விருதுநகர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.