ராசிபுரம் அருகே பத்திரகாளியம்மனுக்கு எருமை கிடா பலியிடும் திருவிழா!

 
rasipuram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு எருமை கிடாவை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரகாளயம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி, அம்மனுக்கு எருமை கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதனையொட்டி, மேட்டுக்காடு கிராம மக்கள் பத்திரகாளியம்மனுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும், கரகம் எடுத்தும், கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

rasi

இதனை தொடர்ந்து, பத்திரகாளியம்மனுக்கு நேர்ந்து விட்ட எருமை கிடாவை பக்தர்கள் கோவிலில் பலியிட்டு, அங்குள்ள குழியில் புதைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பத்திரகாளியம்மனை வழிபட்டனர்.