பள்ளிகொண்டா அருகே காரில் கடத்திய ரூ.1.75 லட்சம் குட்கா பறிமுதல்: வடமாநில இளைஞர் கைது!

 
vlr vlr

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே காரில் கடத்திய ரூ.1.75 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வடமாநில இளைஞரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பெங்களுர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டுவானம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியா சென்னை நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை மேற்கொண்டனர்.

pallikonda

அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் புகையிலை பொருட்கள் கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்பிலான 250 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், குட்காவை கடத்தியது தொடர்பாக காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜானராம் (21) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.