மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்... 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

 
jallikattu

மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் தேவாலய திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல தேவாலய திருவிழாவை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

jallikattu

ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி வீரர்களை அச்சமடைய செய்தன.

jallikattu

இந்த போட்டியில் வெற்றிபெற்ற ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரங்கள், தங்கக்காசு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. போட்டியின்போது காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.