பாதாள சாக்கடை கழிவுநீரை தானியங்கி மோட்டார் மூலம் வெளியேற்றும் திட்டம் தொடக்கம்!

 
perundurai

பெருந்துறை அருகே பாதாள சாக்கடையில் தேங்கும் தண்ணீரை தானியங்கி மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் திட்டத்தை அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார்.

பெருந்துறை அடுத்த கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடிக்கடி மழைநீர் தேங்கி நிற்பதால் வீட்டுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து,  தானியங்கி மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. 

perundurai

தற்போது அந்த பணி நிறைவு பெற்ற நிலையில், நேற்று மாலை பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் மின் மோட்டாரை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். தொடர்ந்து, தேங்கியுள்ள தண்ணீர் குழாய் வழியாக வேறு இடத்தில் வடிகால் வழியாக தண்ணீர் வெளியேற்றும் பகுதியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள்  ரஞ்சித் ராஜ், கேபிஎஸ் மணி, விஜயன் என்கிற ராமசாமி, அருள்ஜோதி செல்வராஜ், அப்புகுட்டி மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.