தீபாவளியை ஒட்டி கோவை மாவட்டத்தில் ரூ.16.70 கோடிக்கு மது விற்பனை

 
tasmac

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே நாளில் ரூ.16.70 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 294 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவை வடக்கில் 158 டாஸ்மாக் கடைகளும், தெற்கில் 136 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு இவற்றில் விற்பனை செய்வதற்காக பல கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

Tasmac

தீபாவளிக்கு முதல் நாளான புதன்கிழமை கோவை வடக்கில் ரூ.8 கோடியே 50 லட்சத்திற்கும், கோவை தெற்கில் ரூ.8 கோடியே 20 லட்சத்திற்கும் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ரூ.16 கோடியே 70 லட்சத்திற்கு மது விற்பனையானது. கோவை மாவட்டத்தில் நாள்தோறும் ரூ.4 கோடிக்கு விற்பனை நடைபெறும் நிலையில், தீபாவளியை ஒட்டி விற்பனை அதிகரித்துள்ளது.