கோவை அருகே ஆண் காட்டுயானை சடலம் கண்டெடுப்பு... தந்தங்களுக்காக கொல்லப்பட்டதா? என விசாரணை

 
elephant

கோவை அருகே தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளைப் பதிபிரிவு, கரியன் படுகை பகுதியில் நேற்று ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருத் வனப்பணியாளர்கள் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவலின் தெரிவித்தனர். அதன் பேரில், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

coimbatore

அப்போது, அந்த யானை இறந்து 40 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், இறந்த ஆண் யானைக்கு 30 வயது என்பதும் தெரிய வந்தது. மேலும், யானையின் 2 தந்தங்களும் மாயமாகி இருந்தது. இதனை அடுத்து, வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர். காட்டு யானையின் 2 தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால், யானை வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால், இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.