காலிங்கராயன் தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு!

 
kalingarayan

740 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர் இணைப்பை சாத்திய படுத்தியவர் காலிங்கராயன் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் கால்வாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட தினத்தையொட்டி, ஆண்டுதோறும் தை 5அம் தேதி காலிங்கராயன் தினமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பவானி அடுத்துள்ள காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன்,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

kalinga
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், 1283 ஆம் ஆண்டு இதே தினத்தில் பவானி ஆற்றை தடுத்து காளிங்கராயன் அணைக்கட்டி 57  கிலோ மீட்டர் தூரம் பாசன பகுதியை உருவாக்கி, நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் வாய்க்காலை இணைத்தவர் காலிங்கராயன் என கூறினார். எந்த விஞ்ஞான வளர்ச்சியும், தொலைத்தொடர்பு சாதனமும் இல்லாத காலத்திலேயே நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்தி காட்டியவர் காலிங்கராயன் என அவருக்கு புகழாரம் சூட்டினார். 

இதனைப் போற்றும் வகையிலேயே காளிங்கராயர் தினம் தமிழக அரசால் கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி வெங்கடாசலம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குருஞ்சி என்.சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

kalinga

இதனை தொடர்ந்து அதிமுக சார்பில்  காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் திருவுருவ சிலைக்கு முன்னாள் கல்வி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணியம், கிட்டு சாமி, முன்னாள் எம்.பி கள் செல்வகுமார சின்னையன், சத்யபாமா என பலர் கலந்து கொண்டனர். இதபோல் காலிங்கராயன் வாய்கால் செல்லும் பகுதிகளில் உள்ள விவசாய குடும்ப பொண்கள் முலப்பாரிவைத்து வழிபாடு செய்து வாயகாளில் விட்டனர்.