ஈரோடு தனியார் அறக்கட்டளைக்கு விருது வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

 
muthu muthu

ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அறக்கட்டளையின் சேவையை பாராட்டி, ஈரோடு லயன்ஸ் கிளப் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் அமைச்சர் முத்துச்சாமி விருதுகளை வழங்கினார்.

ஈரோடு லயன்ஸ் கிளப் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பாக ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு, அவர்களது சிறந்த சேவையை கௌரவிக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்து கௌரவித்தனர். 

muthu

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், லயன்ஸ் கிளப் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன், லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் அக்னி ஸ்டில்ஸ் சின்னசாமி, செயலாளர் கணேசன், ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், எம்.சி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் ராபின் மற்றும் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க முன்னணி நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஒளிரும் ஈரோடு உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.