வாள்சண்டை, நீச்சல் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் பாராட்டு

 
namakkal namakkal

வாள்சண்டை, மாநில அளவிலான நீச்சல், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று வென்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாராட்டு தெரிவித்தார்.

nama

தமிழ்நாடு வாள்சண்டை விளையாட்டுக் கழகம் சார்பில் சமீபத்தில் வாள்ச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. அதே போல்,. 21-வது மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் மற்றும் வில்வித்தை போட்டிகளில் நாமக்கல் மாவடடத்தை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்று சாதித்தனர்.

namakkal 2

இதனை தொடரந்து, போட்டிகளில் வென்ற மாணவ - மாணவிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா. பி. சிங்கை நேரில் சந்தித்து பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் (பொறுப்பு) சிவரஞ்சன், வாள்சண்டை பயிற்சியாளர் பிரபுகுமார், நீச்சல் பயிற்சியாளர் ரகுபதி, கால்பந்து பயிற்சியாளர் கோகிகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.