ராதாபுரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

 
judgment

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிய சேர்ந்தவர் குமார் (48). தொழிலாளி. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த சுடலையாண்டி(54) என்பவர் மது அருந்த பணம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி சுடலையாண்டி மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (55) ஆகியோர், குமாரை ஆட்டோவில் அழைத்துச்சென்று ராதாபுரம் அருகேயுள்ள தோட்டத்தில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

arrest

இது தொடர்பாக புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, சுடலையாண்டி மற்றும் முருகேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த ராதாபுரம் போலீசாருக்கு, மாவட்ட எஸ்பி சரவணன் வெகுவாக பாராட்டினார்.