புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி... ஈரோட்டில் ரூ.5.28 கோடிக்கு மதுபானம் விற்பனை!

 
tasmac

புத்தாண்டையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 5 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்று உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது. பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் முன்னதாகவே குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள்.

Tasmac

இதனால் விசேஷ காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி புத்தாண்டை வரவேற்கும் விதமாக குடிமகன்கள் நேற்று முன்தினம் மாலை முதல டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். காலை முதல் மாலை வரை மதுபான விற்பனையும் சுமாராகவே இருந்தது. ஆனால் மாலை 6 மணிக்குப் பிறகு டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் குவிந்தனர்.

பீர், பிராந்தி, ரம் போன்ற வகைகளை அள்ளி சென்றனர். புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்து உள்ளார்.