அரியலூர் மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு - ஆட்சியர் ரமண சரஸ்வதி!

 
paddy

அரியலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்ய 2-ம் கட்டமாக 15 இடங்களில் இன்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கரீப் KMS 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கோடாலிக்கருப்பூர் அருள்மொழி, கார்குடி, கங்கைகொண்ட சோழபுரம், காடுவெட்டி, சுத்துக்குளம், கோவிந்தபுத்தூர் மற்றும் முட்டுவாஞ்சேரி, செந்துறை வட்டத்தில், குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் கூடலூர், அரியலூர் வட்டத்தில் கண்டிராத்தீர்த்தம் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ariyalur

மேற்கண்ட கிராமங்களில் 01.02.2023 முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாய பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.