மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - திண்டுக்கல்லில் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!

 
dgl collector

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் விசாகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர். இதன்படி, நேற்றை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன.

dgl

பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, நீரில் மூழ்கி உயிரிழந்த சாமிகண்ணு என்பவரது வாரிசுதாரர் சகாயமேரிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், பிரவீன் குமார் என்பவரது வாரிசுதாரரான ராமுதாய்க்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விசாகன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தினேஷ்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.