ராசிபுரம் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

 
suicide suicide

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் தியாகு. முன்னாள் கடற்படை வீரர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் சுவாதி(17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நன்றாக படிக்கும் சுவாதி பொதுத்தேர்வு நெருங்கி விட்டதால் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை சுவாதி தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

rasipuram

இது குறித்து விடுதி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், ராசிபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.