அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு!

 
arunachaleshwarar arunachaleshwarar

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பழம், பன்னீர், பால், சந்தனம், மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு புனித பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது.

அருணாச்சலேஸவரர்

அதனை தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, நந்தி பெருமானுக்கு மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதேபோல், கோயில் மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்ளிட்ட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் ஆராதணை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.