திண்டுக்கல்லில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்... 2,219 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது!

 
323

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2,219 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்( மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திண்டுக்கல் எம்.வி.எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் படிப்பு படித்தவர்கள் என 6,122 நபர்கள் கலந்து கொண்டனர். 

ffdd

மேலும், தனியார் துறை சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனம் என 148 வேலைவாய்ப்பு தொழில் நிறுவனங்களும், 11 திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்த முகாம் மூலமாக 2,219 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி தொகுதி எம்எல்ஏ  செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். 

தொடர்ந்து, முகாமில் மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ செந்தில்குமார் முன்னிலையில், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு  தலா ரூ.75,500 மதிப்பில் மொத்தம் ரூ.15.30 லட்சம் மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.