காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி... இளைஞர் பலி!

 
poison poison

தேனி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், காதலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி பழனிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரித்தீஷ்குமார் (18). இவர், அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணான ரிவேதாவை(18)  காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் அறிந்த ரிவேதாவின் பெற்றோர், அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

theni

இதனால் அதிர்ச்சியடைந்த ரித்தீஷ்குமாரும், ரிவேதாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, நேற்று கோட்டூருக்கு அருகே விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். மயங்கிய நிலையில் கிடந்த காதலர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்கை பலனின்றி ரித்தீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரிவேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரித்தீஷ்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.