காளையை அடக்கினால் ரூ.200- காசுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட பள்ளி மாணவன்

 
ச்

தஞ்சை அருகே வல்லத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் தீரண் பெண்டிக்ட் பரிதாபமாக உயிர் இழந்தார். பள்ளிவிட்டு வீடு திரும்பிய மாணவனை  வழியில் ஜல்லிக்கட்டுக்காக காளையை தயார் செய்துகொண்டிருந்த காளையின் உரிமையாளர் சுரேஷ்  பள்ளி மாணவரிடம் காளையை பிடித்தால் 200 ரூபாய் தருகிறேன் என்று ஆசை காட்டியதால்,  மாணவன் காளையை பிடித்த போது காளை முட்டியதால் மாணவர் இறந்துவிட்டதால், காளையின் உரிமையாளரை கைது செய்திட  மாணவனின் உறவினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.


 
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர்  இசையாஸ்  என்பவரின் மகன் தீரண்பெண்டிக்ட். இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த தீரண் பெனெட்டிக்ட். பள்ளி அருகில் அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டுக்காக காளை ஒன்றை சுரேஷ் என்பவர் தயார் செய்துகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மாணவர்களிடம் இந்த காளையை தொட்டால் 200 ரூபாய் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதையடுத்து, மாணவர் தீரண் பெனடிக்  நின்று கொண்டிருந்த மாட்டை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது திடிரென மாடு அவருடைய நெஞ்சில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். உடனே  அருகில் இருந்தவர்கள்  மாணவனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் பரிதாபமாக உயிர் இழந்தார்   மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாணவன் இறப்புக்கு காரணமான மாட்டின் உரிமையாளர் சுரேஷை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்த மாணவரின் உறவினர்கள் கோருகின்றனர்.