கோவை அருகே விற்பனைக்காக பதுக்கிய 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது

 
cannabis

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில இளைஞரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக , பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மதுவிலக்கு உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் கருமத்தம்பட்டி பகுதிக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடமாநில இளைஞர் ஒருவர் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

cannabis

இது தொடர்பாக அந்த நபரை போலீசார் விசாரித்தபோது, அவர் ஒடிசாவை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா(32) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, மணிநந்தர் மகாநந்தாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து  4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான மணிநந்தர் மகாநந்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.