மொடக்குறிச்சியில் சிறப்பு செல்வமகள் சேமிப்பு திட்ட முகாம்... பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார்!

 
mla saraswathi

தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கஸ்பாபேட்டை ஊராட்சியில் நடந்த சிறப்பு செல்வமகள் சேமிப்பு திட்ட முகாமை பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட கஸ்பாபேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், இந்திய அஞ்சல் துறையின் சார்பாக வருடாந்திர தேசிய அஞ்சல் வார விழாவை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சிறப்பு ஆதார் முகாம் மற்றும் சிறப்பு செல்வமகள் சேமிப்பு திட்டம் முகாம் அக்.12 மற்றும் அக்.14 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

mla saraswathi

இந்த விழாவிற்கு மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்களை விரிவாக எடுத்துரைத்து,சேமிப்பின் அவசியத்தை உணர்த்தினார்கள். மேலும், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.20,000 -ஐ தனது சொந்த நிதியில் இருந்து நன்கொடையாக 80 ஏழை பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் வழங்கினார்.

அவருக்கு ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் சைமன் டோபியஸ், பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.  இந்த நிகழ்வில் கஸ்பாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கே. அர்ச்சுனன், பாஜக மாவட்ட தலைவர் எஸ். ஏ.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் என். பி. பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.