கோவை குடோனில் 4-வது நாளாக பதுங்கி இருக்கும் சிறுத்தை.... புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிட்ட வனத்துறை!

 
leopard

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை பிடிக்க 4-வது நாளாக வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், இன்றும் சிறுத்தை குடோனில் உலாவும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்து கொண்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக குடோனின் 2 வாயில்களிலும் கூண்டுகள் வைத்து, அதில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில்  ஈடுபட்டு உள்ளனர். மேலும், 5 கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

leopard

தொடர்ந்து, 4-வது நாளாக இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று அதிகாலையில் குடோனில் சிறுத்தை நடமாடிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளனர். அதில், அதிகாலை அளவில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமராவை உற்று பார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்புவம் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

மேலும், இந்த சிறுத்தை வனத்தில் இருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டப்படிருக்கலாம் என்றும், அல்லது ஏற்கனவே கூண்டில் பிடிபட்டு வனத்தில் விடப்பட்ட சிறுத்தையாக கூட இருக்கக்கூடும்  எனவும் சந்தேகிக்கின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே 4-வது நாளாக அதனை கூண்டிலேயே பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.