டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,562 பேர் எழுதினர்

 
tnpsc

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வை 1,562 பேர் எழுதினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 2  மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு நேற்று 9 மையங்களில் நடைபெற்றது. 
இத்தேர்வை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 9 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு பறக்கும்படை, 3 நடமாடும் அலகு, 9 ஆய்வு அலுவலர்கள், 10 வீடியோ கிராபர்கள், 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள், 9 தேர்வுக்கூட காவலர்கள் என மொத்தம் 44 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

tnpsc exam

 குரூப்  2 முதன்மை தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் சிறப்பு நடமாடும் மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இத்தேர்வில் பங்கேற்க  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்1,687 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 1,562 நபர்கள் தேர்வில் பங்கேற்றனர். 125 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. 

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஆர்.டி.ஓ சுகுமார், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சம்பத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.