விழுப்புரத்தில் நாளை இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு!

 
police exam

விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாளை இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நாளை முதல் வரும் 11ஆம் தேதி வரை சரக டிஐஜி பாண்டியன் முன்னிலையில், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் தமிழ்நாடு சீறுடைப்பணியாளர் தேர்வு மையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற 3,552 இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறை காப்பாளர் எழுத்துத்தேர்வில் நமது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 871 தேர்வாளர்கள் இந்த உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள உள்ளனர்(ஆண்கள் மட்டும்) இந்த உடற்தகுதி தேர்வில் முதல் 2 நாட்கள் (6.02.2023 -7.02.2023) சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பு அளவீடு மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் உடற்திறன் தேர்வில் பங்குகொள்ள அனுமதிக்கப்படும். உடற்தகுதி தேர்வு 8.02.2023 முதல்  11.02.2023 வரை நடைபெறும்.

vilupuram sp

உடற்திறன் தேர்வில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100  (அ) 400 மீட்டர் ஓட்டம் நடைபெறும். உடற்திறன் தேர்வில் தகுதிநீக்கம் ஏதும் இல்லை. காலை 6.30 மணிக்கு துவங்கும் அதற்கு ஏற்றார்போல் தேர்வர்கள் ஆயுதப்படை மைதானத்திற்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வுகளில் பங்கேற்க வருபவர்கள் மொபைல் போன் எடுத்து வரக்கூடாது. விளையாட்டு சான்றிதழ் மற்றும் தமிழ்வழி கல்வி சான்றிதழ் போன்றவை விண்ணப்பிக்கும்போது விடுபட்டிருந்தால் அவற்றை நேரில் சமர்ப்பிக்கலாம். உடற்தகுதி மற்றும் உடற்திறன் இவற்றில் பங்கேற்க வரும் தேர்வர்கள் எந்த ஒரு அடையாளம் கொண்ட டி சர்ட் அணியக்கூடாது. தாங்கள் அணிந்து வரும் டிசர்ட் பிளைன் ஆகஇருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.