பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

 
tn

பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

tn

பனிமய மாதா பேராலயம் தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக உயர்த்தினார்.

 

tn

இந்நிலையில் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தின் 441 வது ஆண்டு  பேராலயத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.  சிறப்பு திருப்பலி உடன் தொடங்கிய கொடியேற்று விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிகர நிகழ்ச்சியான தங்கத்தேர் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.  10 நாட்கள் நடைபெறும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.