கோவையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

 
cbe

கோவையில் உடல்நல குறைவால் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி இறந்த நிலையில், அவரது இறப்பு செய்தி கேட்ட அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்தவர் பழனிசாமி(78). இவர் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இவர் விசைத்தறியாளர்களின் உரிமைகளுக்காகவும், இலவசம் மின்சாரம் பெற்றுத்தரவும் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பழனிசாமி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.

dead body

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். பழனிசாமி இறப்பு செய்தி, நேற்று அதிகாலை அவரது மனைவி கருப்பாத்தாளிடம்(72) தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கருப்பாத்தாள் திடீரென மயங்கி விழுந்தார்.இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கருப்பாத்தாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அவர்களது உடலுக்கு இறுதிச்சடங்ககுள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.