குமரி அருகே களையெடுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி!

 
dead body

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே அரசு ரப்பர் கழக தோட்டத்தில் களையெடுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகேயுள்ள தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (43). இவருக்கு மீனா குமாரி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ராஜ்குமார், கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்டத்திற்கு உட்பட்ட பரளியாறு பிரிவில் களப்பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை ராஜ்குமார் ரப்பர் தோட்டத்தில் இயந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக களை எடுக்கும் இயந்திரம் ராஜ்குமாரின் மார்பு பகுதியில் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

kumari gh

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் கீரிப்பாறை போலீசார், ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரப்பர் கழக பரளியாறு கோட்ட மேலாளர் பிரபாகரன், களை எடுப்பு ஒப்பந்ததாரர் சந்தீப் (25) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.