• July
    16
    Tuesday

Main Area

Main



பிரசாரத்துக்கு கிளம்பிய கேப்டன் விஜயகாந்த்; தொண்டர்கள் உற்சாகம்-புகைப்படங்கள்!

விஜயகாந்த்
விஜயகாந்த்
Loading...

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிளம்பிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

vijayakant

இதற்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்ட அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார்.

vijayakant

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

vijayakant

இந்நிலையில், தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள விஜயகாந்த் கிளம்பி செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கேப்டனின் வரவு தேமுதிக தொண்டர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

தேர்தலில் அதிரடி திருப்பங்களை உண்டாக்கும் அந்த வீடியோக்கள்; இன்று ரிலீசாகுமா?

2018 TopTamilNews. All rights reserved.