• February
    19
    Tuesday

Main Area

Main

ஜாக்டோ-ஜியோ விவகாரம்: சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

jactogeo
jactogeo
Loading...

சென்னை: ஜாக்டோ-ஜியோ விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

அரசுப் பணியாளர்கள் - ஆசிரியர்கள் அமைப்புகள் இணைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை 9 தினங்கள் மேற்கொண்டனர்.

முதலமைச்சர் அழைத்து பேசி சுமுகத் தீர்வுகாண வேண்டும் என போராட்டக்குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன. வேண்டுகோளை அரசு புறக்கணித்த நிலையில், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை  ஏற்று தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பணிக்கு திரும்பினர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஏராளமானோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 8-ம் தேதி 2019-20-ஆம் நிதிஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான பொது விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், ஜாக்டோ-ஜியோ விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதல்வர் பேச வேண்டும் என திமுக அதில் வலியுறுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.