• April
    25
    Thursday

Main Area

Main



ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு திமுகவே காரணம்: உடன்பிறப்புகளிடையே ஸ்டாலின் பேச்சு

grama sabha
grama sabha
Loading...

தருமபுரி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு திமுகவினரே காரணம் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 

அந்த இடைத்தேர்தலில் தனித்து விடப்பட்ட தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் களம் கண்டு, வெற்றியும் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். திமுகவின் மருதுகணேசுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

mk stalin

ஜெயலலிதா இருந்த போதே, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன், ஆர்.கே.நகர் தொகுதியில் 50,000 வாக்குகளை பெற்றிருந்தார். இருப்பினும், தினகரனை எதிர்த்து போட்டியிட்டு திமுக டெபாசிட் இழந்தது, அக்கட்சியினர் மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களிடமும், ஏன் தினகரனுக்குமே கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். 

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்ன நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டர்களோ அதன் படி பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

stalin

மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், ஒரு வார்டில் 25 பேர் பூத் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தும் 11 பேர் தான் திமுகவிற்கு வாக்களித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த செயலானது நம் ஒட்டுமொத்த இயக்கத்தையே ஏமாற்றும் செயல் எனவும் ஸ்டாலின் உருக்கமாகப் பேசியுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.