• May
    26
    Sunday

Main Area

Main



சோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக்  கட்டியதற்கு  தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா!? தல புராணம்-7

முல்லைவன நாதர் திருக்கோயில்
முல்லைவன நாதர் திருக்கோயில்
Loading...

சீர்காழியிலிருந்து 14 கிமீ தொலைவில் வங்கக் கடலோரத்தில் கிழக்கு நோக்கி உப்பனாற்றின் வடகறையில் அமைந்திருக்கிறது தென் திருமுல்லைவாசல். தல விருட்சம் முல்லை என்பதால் முல்லைவாசல்,வடக்கே சென்னையில் ஒரு முல்லைவாசல் ( திருமுல்லைவாயல்) இருப்பதால் தென் திருமுல்லைவாயில் ஆனது.

60 செண்ட் பரப்பளவில் ஒற்றை பிரகாரம் கொண்ட சிறியகோவில்.மூலவர் சுயம்புவான முல்லைவன நாதர்.மாசிலாமணீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி அணிகொண்ட கோதையம்மை.பிரம்ம,சந்திர தீர்த்தங்கள் இருக்கின்றன.

mullaivanathar temple

சோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கடலோர முல்லை வனத்துக்குள் வேட்டையாடிக்கொண்டு வரும்போது,அவனது குதிரையின் கால்களை அடர்ந்த முல்லைக்கொடிகள் தடுத்தனவாம்.உடனே கிள்ளிவளவன் தன் உடைவாளை எடுத்து அந்தக் கொடிகளை துண்டித்தான்,அந்த முல்லைப்புதருக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேல் அரசன் வாள் பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்திருக்கிறது.

mullaivanathar temple

அதை பார்த்து பதறிப்போன கிள்ளிவளவன்,தவறு செய்துவிட்டோமே என்கிற பதைபதைப்பில் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்திருக்கான். அப்போது,இறைவன் அவனுக்கு காட்சிதந்தாராம்.அதனால் கிள்ளிவளவன் இந்தக் கோவிலை கட்டியதாக தலபுராணம் சொல்கிறது.

இத்தலத்தில் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் fitness secretசெய்கிறாள்.அக்கினி திசையில் உள்ள கிணற்றில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த நோயிலிருந்து விடுதலை பெற்ற தலம்.

mullaivanathar temple

இத்தலத்து பெருமானின் பக்தையாக ஒரு பரத்தை இருந்தாள்.அவள் தன்னை தீண்டியோர் எல்லோரையுமே கணவனாக கருதி ஒழுகியதால் இறைவன் அந்த பரத்தைக்கு சிவலோக பதவியளித்த இடம்.

mullaivanathar temple

இத்தலத்தில் மகோதயம்,சூரியகிரகணம்,சந்திரகிரகணம்,அமாவாசை போன்ற நாட்களில் நமசிவாய நாமத்தை ஓதுவோருக்கு சகல நண்மைகளும் கிட்டும். திருஞான சம்பந்தர் பதிகம் பெற்றது.நான்கு கால பூஜை நடைபெறுகிறது. இக்கோவில் திருக்கைலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமானதாகும்.

இதையும் படிங்க: வெள்ளைக்கார விநாயகரைத் தெரியுமா உங்களுக்கு?

2018 TopTamilNews. All rights reserved.