• June
    27
    Thursday

Main Area

Main



நோயாளி வயிற்றுக்குள் கிடந்த 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரூ டிரைவர், 1 கத்தி: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!?

பாதிக்கப்பட்டவர்
பாதிக்கப்பட்டவர்
Loading...

இமாசலப்பிரதேசம்:  வயிற்று வலி என்று வந்தவர் வயிற்றிலிருந்து  8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இமாசலப்பிரதேசத்தில் உள்ள மாண்டி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வயிற்று வலி என்று அவரது குடும்பத்தார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரது வயிற்றை ஸ்கேன்  செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் 8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைத்து அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால்  அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லையாம். இதற்கு மேலும் பொறுமைக்காத்தால் ஆபத்தாகிவிடும் என்று எண்ணி உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததோடு, நோயாளியும் நலமுடன் உள்ளார்.

 

இந்நிலையில் இது குறித்து டாக்டர் நிகில் கூறும்போது,  வயிற்றுக்குள் இத்தனை பொருட்கள் இருந்ததைப் பார்த்ததுடன் அதிர்ந்து விட்டோம். அதனால் உடனடியாக எங்கள் மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கிவிட்டோம். சாதாரணமான மனிதர்கள் கத்தி, ஸ்குரூடிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள். ஆனால்  நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது நடந்துள்ளது. இது அரிதான ஒன்றாகும்' என்றார். 

2018 TopTamilNews. All rights reserved.